திருடப்படும் வாய்ப்புகள்
வயதிற்கேற்ற வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும். நாம் ஒவ்வொருவரும் படிப்பிற்கான வாய்ப்பு, வேலைக்கான வாய்ப்பு, சுற்றுலா செல்வத்திற்கான வாய்ப்பு, நண்பர்களுடன் விளையாடுவதிற்கான வாய்ப்பு என்று இப்படி ஏதாவது ஒரு சில வாய்ப்புகள் உங்களுக்கு தெரிந்தே கைவிட்டு போயிருக்கும். அவையெல்லாம் நினைவில் இருக்கும். மீண்டும் அதே சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் செல்லாமல் விட்டது மனதில் இருக்கலாம். அந்த காலங்கள் திரும்ப கிடைக்காது.
எந்த ஒரு வாய்ப்பும், கிடைக்காமல் போனதிற்கு காரணம் பணம், போதிய மதிப்பெண் இல்லாதது, குடும்ப சூழ்நிலை என்று ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணம் இருக்கும். தக்க காரணத்தினால் விடுபட்ட வாய்ப்புகளால் நமக்கு நம் மீது எந்த பாவப்பட்ட நினைப்போ, கோவமோ வராது. மாற்றாக நம் மீது நமக்கே மரியாதை கலந்த அன்பு கிடைக்கும். நாம் மனதளவில் பக்குவ பட்டிருப்போம். ஆனால் இதே வாய்ப்புகள் நமக்கு கிடைக்க வேண்டியது வேறு ஒருவரின் மேம்போக்கான நடவடிக்கைகளினால் தவறினால் நாம் வாழ்நாள் முழுவதும் நினைத்திருப்போம். அவர்களினால் எனக்கு அது கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டு இருப்போம்.
குழந்தைகள் பிறந்ததில் இருந்து, எத்தனை வாய்ப்புகள், தன் குழந்தையை ராஜா/இராணி போல வளர்க்க வேண்டும், நாம் ஒவ்வொருவரும் ராணி/ ராஜாவாக வாழாததாக கற்பனை செய்துகொண்டு, தான் குழந்தையாக இருக்கும் போது கிடைக்காத பொம்மைகளை வாங்கி தருவதும், தான் சிறு வயதில் செய்த சிறு சிறு வேலைகளை செய்ய விடாமல்நம்மலே செய்வது என்று அவர்களின் வாய்ப்புகளை நாம் எடுத்து கொள்கிறோம்.
குழந்தை தவழ்கிறான் என்றால், நடக்கும் முன் தவழ்வதிற்கும் வளர்ந்து நடந்த பிறகு தவழ்வது வாய்ப்பாகாது. படிகளை ஏறுகிறான், இறங்குகிறான் அல்லது ஏற முயற்சிக்கிறான் என்றால் சிறு தவறுகள் நடக்கும், அதற்க்கு முன் எச்சரிக்கையாக பக்கத்தில் ஒவ்வொரு படியாக கூடவே செல்லலாம். படிகள் பக்கத்திலே போக விடாமல் அதில் அவர்களை நடக்க விடாமல் தூக்கி சென்றால், அவர்களின் வாய்ப்பு திருட படுகிறது.
குழந்தை ஒரு பொருளை பிடித்து எடுக்க ஆரம்பித்தவுடன், அதை முதலில் வாயில் தான் வைக்கும். கையில் எடுத்து வாய்க்கு கொண்டு செல்ல தெரிகிறது என்றால், அவர்கள் தானாக உணவு உண்ண தயாராகி விட்டனர். உண்ண ஆரம்பிக்கும் நேரத்தில், மெதுவாகவும், அவர்கள் மீது சிறுது சிதறியும், அவர்களின் சுற்று வட்டாரத்தையே சோற்று பருக்கைகளை சிதறியும் இருக்கும். சாப்பிடத்தைவிட சிதறியதே அதிகமாக தெரியும். நாம் ஊட்டிவிட்டால் சிந்தாமல் சிதறாமல் வெகு சீக்கரம் வேலையை முடித்து விடலாம் என்ற நினைப்பு அவர்களின் வாய்ப்பை திருட வைக்கிறது.
இந்த மாதிரி நாம் அவர்களுக்காக செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் யோசித்து பார்த்தல், அவர்களின் பங்கில் நாம் இருப்போம்.பல் துலக்க பற்பசைகளை போடுதல், குளிக்க வைத்தல், அவர்களின் பள்ளி துணிகளை தேர்வு செய்தல், உணவை ஊட்டி விடுதல், அவர்களின் சாப்பிட்ட தட்டை நமே கழுவி வைத்தல், அவர்களின் பள்ளி பையை சரி பார்த்தால் என்று அணைத்து நல்ல பழக்கங்களையும் நாம் செய்கிறோம்.
இதெல்லாம் ஒரு வேலையா, இதெல்லாம் அவர்கள் செய்யாமல் நல்லா படுச்சா போதும், இதைய விட பல வேலைகளை நான் செய்து கொடுத்திடுவோம் என்று நாம் நினைக்கலாம். இதனால் அவர்களின் வாய்ப்பு பறிக்க படுகிறது என்ற விஷயத்தை மறந்து விடுகிறோம்.
அவர்கள் படியில் நடப்பதினால் உயரத்தின் பயம் குறையும், தன்னம்பிக்கை வரும், அவர்களே உணவை உண்ணுவதால் என்ன உணவு உண்ணுகிறோம், ருசியை அனுபவித்து உண்ணுதல், அவர்களே உண்ணுவதால் சாதத்தின் சிறு பருக்கையையும், சப்பாத்தி, தோசை போன்ற உணவை பிச்சி சாப்பிடும் போது அவர்களின் (Fine motor skill) கண், கை, மூளையின் ஒருங்கிணைப்பு திறன் கூடும். இப்படியே சொல்லிகிட்டே போகலாம். பள்ளிக்கு எந்த துணி, வீட்டிற்கு எது, வெளியில் எதை போடுவது என்ற என்று பிரித்து வைத்தல், நேர மேலாண்மை, பணி மேலாண்மை என்று சிறு வயதில் இருந்து அதை தனது தினசரி வாழ்க்கையில் இருந்து அறிவர். கண், கை, மூளையின் ஒருங்கிணைப்பு திறன் குழந்தைகளுக்கு நல்ல படம் வரையும், நல்ல கையெழுத்து என்று உதவி செய்யும். ஒவ்வொரு வேலையும் அவர்களின் படிப்பிற்கும் உதவி செய்யும்.
நாம் எப்போதும் இந்த பணிவிடைகளை செய்யமாட்டோம். கொஞ்சம் பெரியவர்கள் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக குறைப்போம். உதாரணத்திற்கு 8 வயதாகும் பொது 4 அல்லது 5 வயது குழந்தைகள் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய விட்டுடுவோம். ஆனால் நாம் எதிர்பார்ப்பது 10 வயது குழந்தைக்கான முன்னேற்றத்தை அவர்களின் ஒவ்வொரு செயல்களில் இருந்தும். அந்த வேலைகள் திறம் பட இல்லை என்று நாம் கடிந்து கொண்டால் அது அவர்களை உளவியல் விதமாக பாதிக்கலாம்.
அவர்களுக்கு உதவுகிறோம் என்றால் ஒவ்வொரு வேலைகளையும் பொறுமையாக அவர்களே செய்ய போதித்தலே. ஒரே நாளில் அனைத்தையும் ஆரம்பிக்காமல் வாரம் ஒன்றாக, பழக்க படுத்தலாம்.
நல்லதோர் குடும்பம் பல்கலை கழகம்.