படமும் குழந்தைகளும்
வரலாற்று கோப்புகளில் இருந்து ஒரு துளி.
"மே 29, 2017 அன்று எனக்கு அதிக சந்தோசமா இருந்தது.மனம் மிகவும் தெளிவாக, பத்து குதிரை வேகமெனும் ஓட தயாராக உள்ளது. நூறு யானை பலமேனும் இழுத்து பார்த்திட வேண்டும் என்று இருக்கிறது. மனித இயந்திரமாக ஓடி கொண்டிருக்கும் நாட்களுக்கு இடையில் எது என்னை இவ்வளவு சந்தோசப் படுத்தியது. இவ்வளவு மாற்றத்தை கொடுத்த அந்த நிகழ்வு எது!!. இளையவன்(3 வயது) மூன்று வார்த்தைகளை கோர்வையாக பேச அதை நான் கேட்ட தருணமா, அல்லது பெரியவன்(வயது 5.5) கண்ணில் இருந்து சிறு உப்பு நீர் வர காரணமாக இருந்த அந்த படத்தின் காட்சிகளா!.
Khumba!! இது தான் அந்த படம். இது ஒரு அனிமேஷன் படம். ஒரு வரிக்குதிரை பிறக்கும், அதன் உடம்பில் பாதிக்கு மேல் வரிகள் இருக்காது. மற்ற குதிரைகள் இதை ஒரு சகுனமாக பார்க்கும். அதன் அம்மா, பாலைவனத்தை தாண்டி ஒரு புனித நீர் இருக்கு அங்கே குளித்து எழுத்தால் வரிகள் வரும் நீ கவலை படாதே என்று ஒரு கதை சொல்லி தேற்றும். மற்றவர்கள் நினைத்தது போலவே, அந்த வருடம் மழை இல்லாமல் காடே வறண்டு விடும். மற்ற குதிரைகள் இந்த Khumba குதிரையால் தான் இப்படி ஆனது என்று சொல்ல, இது அந்த புனித நீரை தேடி தனியே சென்று விடும். போகும் வழி எங்கும் அது படும் துயரங்கள் மற்றும் அது வரிகளை பெற்றதா, நீர் மீண்டும் ஓடத்தில் வந்ததா என்பதே கதை. இயக்குனரின் தத்ரூபமான காட்சி அமைப்பு ஒரு குழந்தையையும் கனிய வைக்க முடியும். படத்தின் சில காட்சிகள்
நன்றி இயக்குனரே. எத்தனையோ படங்கள் அவன் பார்த்திருந்தாலும் இந்த படத்திற்கே முதல் வெற்றி சென்று சேரும். எனது மகனின் உணர்வை வெளி கொண்டுவந்து எனக்கு காட்டிய தருணம்!! அந்த உப்பு நீர் சந்தோஷத்தால் வந்தது. அவன் சொன்னான் " அம்மா, எனக்கு கண்ணில் இருந்து தண்ணியா வருது, நான் அழல, ஆனா வருது". அந்த குரல் தான் ஏதோ தவறு செய்ததால் இந்த கண்ணீர் வருகிறது என்றது போல் இருந்தது. கண்ணீர் சந்தோஷத்திலும் வரும், வருத்தத்திலும் வரும் என்று அவனுக்கு புரிய வைத்தோம். எத்தனையோ சிரிப்புகள் இது நாள் வரை நான் அவனிடம் பார்த்திருந்தாலும், இது முக்கியமான தருணமாக படுகிறது.
நாங்கள் இருக்கும் ஊரின் உள்ளூர் நூலகம் ஒரு கைபேசி செயலி வெச்சிருக்காங்க. நூலகத்தில் உறுப்பினர்கள் அதை பதிவிறக்கம் செய்து, அதில் இருக்கும் சேவைகளை பயன்படுதிதிக்கலாம். அதில் ஒன்று, மாதம் மூன்று படங்களை பதிவிறக்கம் செய்யலாம். அதில் இந்த Khumba இன்று பார்த்தோம்.
நம்ம ஊர் நூலகம் இந்த மாதிரியான வளர்ச்சி அடைய கனவு காண்போம். கனவு ஒரு நாள் நிச்சயமாக நிஜமாகும்.
இந்த மாதிரியான தரம் வாய்ந்த அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கு காட்டலாம். படங்கள் மொழிபெயர்க்கும் பொது அதன் திறன் குறையாமல் இருந்தால் நல்லா இருக்கும். தமிழிலும் பார்க்கலாம். ஒவ்வொரு படமும் வயது மதிப்பீடு சரி பார்த்து அது குழந்தைகளும் பார்க்கலாம் என்று இருந்தால் மட்டும் காட்டுங்கள். இல்லையேல் அதனை தவிருங்கள்.அந்த வகையில் 2.0 கண்டிப்பாக 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று.