குச்சிமிட்டாய்
மோனி, இதுதான் என்னோட பேரு. எனக்கு 6 வயசு. இப்போ எனக்கு ஒரு குச்சிமிட்டாய் சப்பிடனும் போல இருக்கு. காலைல பள்ளிக்கோடத்துக்கு போகும்போது ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ஒரு மிட்டாய்ன்னு சொல்லி ரொம்ப படுத்துறாங்களே. ஆனால் எனக்கு இப்போ இன்னொரு மிட்டாய் சாப்பிடனும் போல இருக்கு. என்ன பண்ணலாம்??