குச்சிமிட்டாய்

மோனி, இதுதான் என்னோட பேரு. எனக்கு 6 வயசு. இப்போ எனக்கு ஒரு குச்சிமிட்டாய் சப்பிடனும் போல இருக்கு. காலைல பள்ளிக்கோடத்துக்கு போகும்போது ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ஒரு மிட்டாய்ன்னு சொல்லி ரொம்ப படுத்துறாங்களே. ஆனால் எனக்கு இப்போ இன்னொரு மிட்டாய் சாப்பிடனும் போல இருக்கு. என்ன பண்ணலாம்??



'ஆங்' போனவாரம் கல்யாணத்துக்கு போனப்போ இரெண்டு மிட்டாய் கொடுத்தாங்கல, அதுல ஒன்னு சாப்பிட்டேன், இன்னொன்ன பாவாட சோப்புல தான வெச்சேன். எங்க அந்த பாவாடை!

'ஆயா, போனவாரம் லட்டுஅம்மாயி வீட்டு மாமா கல்யாணத்துக்கு நான் போட்டிருந்த பச்சை பாவாடை எங்க இருக்கு? எங்கையுமே காணம்? நாம கல்யாணத்துக்கு எடுத்துக்கிட்டுபோன  பை காலியா இருக்கு.'

'அது பட்டு பட்டுப் பாவாடைனால, தண்ணி இல்லாம துவைக்கற கடையில கொடுத்திருக்கோம். இன்னும் வர நாலு நாள் ஆகும், ஏன் எதுக்கு கேக்குற?'

'..க்ஆ'.. 'சரி..' 'சும்மாதான், காணமா அதான்!'

போச்சா, இப்போ அதுவும் இல்லையா!!

இரு..இரு.., முந்தினநாள் தாத்தா ஒரு புது வீடு கட்டின விழாவுக்கு போயிட்டு கற்கண்டு கொண்டு வந்தாரே, அத எங்க வெச்சுருப்பாரு?
அது எங்கேன்னு யாருகிட்டேயும் கேட்க முடியாது. என்ன செய்யலாம்?
அவரு எப்பவும் எல்லா பொருளையும் அந்த மாடத்துல தான வெப்பாரு..

'அம்மா, முக்காலி எங்க வெச்சிருக்கீங்க? அது செக்குக்கிட்ட இல்ல.'

'நேத்து தோசை சுடறதுக்கு வெளியில போட்டது அங்கயே இருக்கும், எடுத்துக்கோ'

'சரி'.. அப்பாடா எதுக்குன்னு கேக்கல!!.. நல்ல அம்மா..

முக்காலி போட்டு ஏறுனா கண்டிப்பா மாடத்துல கையால தேடி எடுத்திடலாம்.





'க்ஆ..' இங்கையும் எதுவும் இல்லையே!!

இனிப்பா சாப்பிட எதுவுமே இல்லையே! இந்த டாக்டர் மாமா வீட்டுக்கு வந்து இனிப்பு உடம்புக்கு ஆகாதுன்னு சொன்னதும் சொன்னாரு, இந்த பெருசுங்க எல்லாம் இப்படி வீட்டை தொடைச்சு வெச்சிருக்குங்க!!

'எனக்கு இப்போ ஒரு குச்சிமிட்டாயோ, பஞ்சு மிட்டாயோ, எதோ ஒன்னு எனக்கு வேணும், யாராவுது கொண்டு வந்து தாங்க!!' என் தலைய பிச்சுக்கனும் போல இருக்கு!!!

Popular posts from this blog

பழக்கப்படுத்தல்

பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx Zoo)

படமும் குழந்தைகளும்