இன்றைய விளையாட்டு

விளையாட்டு என்பது பொழுதுப்போக்குக்காக மட்டும் அன்றி, எதாவுது ஒரு முறையில் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் கற்றலை தருபவையாகவும் இருத்தல் நன்று. பெருபாலும் விளையாட்டுகள் அப்படிதான் இருக்கும். கம்ப்யூட்டரில் விளையாடப்படும் வீடியோ கேம்ஸ் தவிர்த்து.

விளையாட்டு என்றாலே ஒரு தனி சந்தோசம் வந்துவிடும் பசங்களுக்கு. ஆனா பள்ளியில் இருந்து வந்தபிறகு, நாங்களும் அலுவலக வேலைகளை முடித்து, விளையாட்டை முதலிலும், மற்ற வேலைகளை பிறகும் செய்தால், வேலைகள் யாவும் மெதுவாக நடந்தது. அதனால விளையாட்டை  (குடும்பத்தாருடன்) தூங்க போகும் முன் விளையாடலாம்ன்னு மாத்திட்டோம். அதுவும் அணைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதை திரும்ப திரும்ப சில நாட்கள் சொல்ல வேண்டி இருந்தது. சொல்லாமல் செய்ய வைக்க, அந்த விளையாட்டிற்கான முன்னுரையை எப்படி சொன்னால் அவர்களுக்கு உற்சாகமாக இருக்குமோ அப்படி சொல்லிவிடுவது. இதனால் அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சரியான நேரத்திற்கு வந்திடுவாங்க.

அந்த வகையில் இன்று பெட்டிகளை உருவாக்கும் விளையாட்டு,

ஒரு தாளில் 4x4, 5x5 என்று எத்தனை புள்ளிகள் வேண்டும் என்றாலும் வைக்கலாம், ஒருவர் ஒவ்வொருமுறையும்  இரு புள்ளிகளை கோடிட்டு சேர்க்க வேண்டும். அதே போல அடுத்த விளையாட்டுக்காரரும் புள்ளிகளை இணைப்பார். இரு புள்ளிகளை சேர்த்த பிறகு அது நான்கு பக்கமும் சேர்க்கப்பட்ட ஒரு பெட்டியாக அமைந்தால் அந்த பெட்டி கடைசியாக புள்ளிகளை சேர்பவருக்கு. அந்த பெட்டி யாருடையது என்பதற்கு பெட்டியினுள் ஒரு அடையாளம் வைக்க படும். இப்படியே சேர்த்துக்கொண்டே சென்றால் அதிக பெட்டிகளை பெற்றவர் விளையாட்டில் வெற்றி பெற்றவர். இதை 2-5 நபர்கள் விளையாடுவது நன்றாக இருக்கும். 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அறிமுக படுத்தலாம்.



ஆரம்பத்தில் சில முறை குழப்பமாக இருந்தார்கள். தொடர்ந்து  விளையாடுவதினால் நன்கு தேர்ந்து வருகின்றனர். விளையாட ஆரம்பிக்கும் சமயங்களில் அவர்களுக்கு தகுந்தார் போல சுலபமாகவும், நாம் ஒவ்வொரு பெட்டியை அடையும் பொழுது எப்படி நாம் அடைந்தோம் என்பதை சொல்லி கொண்டே செல்வதினால், அவர்களும் பெட்டியை எப்படி அடைவது என்பதையும், எப்படி அடுத்தவருக்கு பெட்டி கிடைக்காமல் செய்வது என்பதையும் கற்று கொண்டேவருகின்றனர். சில முறை தோற்பது போலவும், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு கொடுக்கப்படும் வெற்றிக்கான யுக்தியை உயர்த்தி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் நமக்கு கவனம் வேண்டும். அதனால் சுவாரசியமான விளையாட்டாகவே அவர்களுக்கு இருக்கும். தினம் ஒரு விளையாட்டாக விளையாடும் போது உற்சாகம் குறையாமல் இருக்கிறது.

இந்த விளையாட்டுகளினால்,

1. குழந்தைகளோட இன்னும் அதிமாக மனதால், உணர்வுகளால் இணைய முடிகிறது.
2. அவர்களின் புரிதல் எவ்வளவு என்பது தெரிகிறது.
3. எதை எப்படி சொன்னால் எளிதில் அவர்களுக்கு புரியும் என்பது தெரிகிறது.
4. அவர்களின் நுண்ணறிவு மேம்படும்.
5. வெற்றி தோல்விகளை சகஜமாக அணுக பழகுகின்றனர்.

சித்திரமும் கைப்பழக்கம் தானே!!

Popular posts from this blog

பழக்கப்படுத்தல்

பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx Zoo)

படமும் குழந்தைகளும்