Posts

பழக்கப்படுத்தல்

Image
குழந்தைக விளையாடுறதுக்கான விளையாட்டு மைதானம் வீட்டுல இருந்து 2 கிலோமீட்டர் தூரத்துல   இருக்கு . நேற்று எல்லாரும் போயிருந்தோம் . இதற்கு முன்னாடி பலமுறை போயிருந்தாலும் , குழந்தைகளுக்கு சலிப்பே தட்டாத அளவிற்கு விளையாட்டு சாதனங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கிறது . சலிப்பு குழந்தைகளுக்கு மட்டும் அல்ல , எங்களுக்கும் சேர்த்துதான் . எங்களுக்கும்ன்னு நான் சொன்னது பிள்ளைங்க விளையாடுறத வேடிக்கை பார்க்கங்க .

குச்சிமிட்டாய்

Image
மோனி, இதுதான் என்னோட பேரு. எனக்கு 6 வயசு. இப்போ எனக்கு ஒரு குச்சிமிட்டாய் சப்பிடனும் போல இருக்கு. காலைல பள்ளிக்கோடத்துக்கு போகும்போது ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு ஒரு மிட்டாய்ன்னு சொல்லி ரொம்ப படுத்துறாங்களே. ஆனால் எனக்கு இப்போ இன்னொரு மிட்டாய் சாப்பிடனும் போல இருக்கு. என்ன பண்ணலாம்??

இன்றைய விளையாட்டு

Image
விளையாட்டு என்பது பொழுதுப்போக்குக்காக மட்டும் அன்றி, எதாவுது ஒரு முறையில் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் கற்றலை தருபவையாகவும் இருத்தல் நன்று. பெருபாலும் விளையாட்டுகள் அப்படிதான் இருக்கும். கம்ப்யூட்டரில் விளையாடப்படும் வீடியோ கேம்ஸ் தவிர்த்து.

பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx Zoo)

Image
இரெண்டு வாரத்துக்கு முன்னாடி    நண்பர் குடும்பமும்   நாங்களும் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை ( Bronx Zoo க்கு ) சென்றிருந்தோம் . நாங்க இருக்கற இடத்துல இருந்து 90 கிலோமீட்டர் தூரம் . 265 ஏக்கர் பரப்பளவு . நியூயார்க் நகரத்துக்குள்ள பிராங்க்ஸ்ன்ற நகரத்துல இருக்கு . இதன் நடுவுல்   பிராங்க்ஸ் ஆறு ஓடுது . அதனாலயே இந்த காட்சியகத்துக்கு   பிராங்க்ஸ் மிருக காட்சியகமுன்னு பெயர் . மொத்தம்  6000 வகையான உயிரினங்கள் . குழந்தைகள் பூங்கா ,  மனிதக் குரங்கு   குடம் , ஆசிய உலக காடுகள் ,  பட்டாம்பூச்சி தோட்டம் , கடல் சிங்கம் , மடகாஸ்கர் பகுதி விலங்குகள் , 4 பரிமாண திரையரங்கம் , வண்டு சவாரி , டைனோசர் சவாரி , ஒட்டக சவாரி என்று குழந்தைகளுக்கு மனம் நிறைய , கால்கள் சலிக்க அலைந்து திரிய நல்ல இடம் .

குழந்தையும் உறக்கமும்,

எங்க வீட்டுல சின்னவன் சீக்கரம் தூங்கிட்டா ஒரு பெரிய வேலையே முடிஞ்ச மாதிரி இருக்கும். அவனோட வழக்கம், மதியம் 2.30 மணிக்கு ஸ்கூலருந்து வந்தா கொஞ்ச நேரம் விளையாடிட்டு, 3-3.0 மணி போல  தூங்கினா, 5 மணிக்கு எழுந்திரிச்சு பக்கத்து வீட்டு பசங்களோட, அண்ணனோட விளையாடிட்டு குளிச்சிட்டு, சாப்பிட்டு மறுபடியும் நாங்க எல்லாம் தூங்க போற வரைக்கும் எதாவுது விளையாடிகிட்டு இருக்க வேண்டியது. வீடே அமைதியா போகும். சாயந்திரம் குட்டி தூக்கம் போடாமநாள்ல எல்லாம்,  இராத்திரிக்கு எப்படா சாப்பிட்டு தூங்குவான்னு தோணும். ஒரே ஆட்டம், இல்லைனா அழுகை, கோவம், பெரியவனை துரத்துவது, சாப்பிடும் போது எதாவுது இரகளை. உஸ் அப்பாடான்னு தோணும்..

திருடப்படும் வாய்ப்புகள்

வயதிற்கேற்ற வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும். நாம் ஒவ்வொருவரும் படிப்பிற்கான வாய்ப்பு, வேலைக்கான வாய்ப்பு, சுற்றுலா செல்வத்திற்கான வாய்ப்பு, நண்பர்களுடன் விளையாடுவதிற்கான வாய்ப்பு என்று  இப்படி ஏதாவது ஒரு சில வாய்ப்புகள் உங்களுக்கு தெரிந்தே கைவிட்டு போயிருக்கும். அவையெல்லாம் நினைவில் இருக்கும். மீண்டும் அதே சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் செல்லாமல் விட்டது மனதில் இருக்கலாம். அந்த காலங்கள் திரும்ப கிடைக்காது.

அரவணைப்பு

Image
நாமெல்லாம் தொடர்ந்து அதுவும் ஒரே நாட்களில் பல முறை அரவணைப்புகளை பெற்று வளர்ந்திருக்க மாட்டோம். அதற்காக நமது பெற்றோர்களுக்கு நம் மீது அன்பு இல்லை என்று சொல்லவில்லை. அந்த அன்பு உடல் மொழிகளாக வெளிப்பட்டிருக்காது. அதனால் நமக்கும் அரவணைப்பை நமது குழந்தைகளுக்கு கொடுப்பதில் தயக்கம் இருக்கலாம்.